← முகப்பு செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது? அணிகள், போட்டிகள் விவரம்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது? அணிகள், போட்டிகள் விவரம்

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வுகளுள் ஒன்றான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விரைவில் தொடங்குகிறது.

ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த தொடர் பற்றிய முக்கியமான சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்தத் தொகுப்பில்

* இங்கு ஃபிஃபா உலகக் கோப்பை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை, ஃபிஃபா ஆண்கள் உலகக்கோப்பை என்று கொள்க.

2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து எப்போது தொடங்குகிறது?

இந்த உலகக் கோப்பை தொடர் ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி ஜூன் 12-ஆம் தேதி அதிகாலை 12.30 தொடங்கும்.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 19-ஆம் தேதி நடக்கும்.

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் எங்கே நடக்கிறது?

அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இந்த உலகக் கோப்பையை இணைந்து நடத்துகின்றன. 1970 மற்றும் 1986 உலகக் கோப்பைகளுக்குப் பிறகு 3வது முறையாக மெக்ஸிகோவில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுகிறது. அமெரிக்காவில் 1994-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. கனடாவில் ஃபிஃபா உலகக் கோப்பை நடப்பது இதுவே முதல் முறை.

இந்த 3 நாடுகளைச் சேர்ந்த 16 நகரங்களில் (அமெரிக்கா – 11, மெக்ஸிகோ – 3, கனடா – 2) போட்டிகள் நடைபெறுகின்றன. மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் முதல் போட்டி மெக்ஸிகோ சிட்டியில் உள்ள மெக்ஸிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நியூ யார்க்கில் உள்ள நியூ யார்க்/நியூ ஜெர்ஸி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கும் நியூ யார்க்/நியூ ஜெர்ஸி மைதானம்

பட மூலாதாரம், Getty Images

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த உலக்க கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றிருந்தன.

அதிகபட்சமாக ஐரோப்பாவைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்கின்றன. 10 ஆப்பிரிக்க அணிகள், ஆசிய கால்பந்து அசோசியேஷனை சேர்ந்த 9 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. வட அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவிலிருந்து தலா 6 அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. ஒஷானியா பிராந்தியத்தில் இருந்து நியூசிலாந்து பங்கேற்கிறது.

கேப் வெர்டே, குராசாவோ, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய 4 நாடுகள் முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. காங்கோ, ஹைத்தி இரண்டு நாடுகளும் 1974 உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் தகுதிபெற்றிருக்கின்றன. இராக் 1986-க்குப் பிறகு மீண்டும் ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

4 முறை உலகக் கோப்பை வென்ற அணியான இத்தாலி தொடர்ந்து மூன்றாவது முறையாக (2018, 2022, 2026) ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதிபெறத் தவறிவிட்டது.

அதேசமயம், அனைத்து ஃபிஃபா உலகக் கோப்பைகளிலும் பங்கேற்ற ஒரே அணி என்ற தங்களின் சாதனையை பிரேசில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

போட்டிகள் எந்த அடிப்படையில் நடக்கும்?

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் சுற்றில் 72 போட்டிகள், நாக் அவுட் சுற்றில் 32 போட்டிகள் என மொத்தம் 104 போட்டிகள் இந்தத் தொடரில் நடக்கும்.

குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளோடு தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறும். அந்த வகையில் 24 அணிகள், 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றுக்கு நேரடித் தகுதிபெறும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாம் இடம் பிடித்த அணிகளுள் சிறந்த இடத்தைப் பிடிக்கும் 8 அணிகளும் அந்த சுற்றுக்குத் தகுதிபெறும்.

அதன்பிறகு ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும். அரையிறுதியில் தோற்கும் அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும்.

எந்த பிரிவில் எந்தெந்த அணிகள் உள்ளன?

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பையை பிரேசில் 5 முறை வென்றிருக்கிறது

பட மூலாதாரம், Getty Images

இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ள அணிகள் எவை?

ஃபிஃபா உலகக் கோப்பையை இதுவரை 8 அணிகள் வென்றிருக்கின்றன.

இதுவரை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் அணிகள் விவரம்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net