← முகப்பு செய்திகள்

உரிமை​யியல் வழக்​கு​களில் தமிழக அரசுக்​காக ஆஜராகி வாதிட ஏது​வாக 17 அரசு வழக்​கறிஞர்​களை நியமித்து தமிழக

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
உரிமை​யியல் வழக்​கு​களில் தமிழக அரசுக்​காக ஆஜராகி வாதிட ஏது​வாக 17 அரசு வழக்​கறிஞர்​களை நியமித்து தமிழக
உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட 17 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

உரிமை​யியல் வழக்​கு​களில் தமிழக அரசுக்​காக ஆஜராகி வாதிட ஏது​வாக 17 அரசு வழக்​கறிஞர்​களை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக அரசு தரப்​பில் உரிமை​யியல் வழக்​கு​களில் ஆஜராகி வாதிடும் வகை​யில் சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தற்​காலிக அடிப்​படை​யில் 17 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி, அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் பரிந்​துரை​யின்​பேரில் சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு அரசு வழக்​கறிஞர்​களாக ஆர்​.க​வுரி, ஜி. தன மாத்​ரி, முகமது பயாஸ் அலி, எம்​.சிவவர்த்​தனன், எம்.குருபிர​சாத், அமிர்த பூங்​கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்​தர், டோமினிக் எஸ்​.டே​வி்ட், ஆர்.சக்​கர​வர்த்தி ஆகியோர் மாநில அரசு ப்ளீடர்​கள் என்ற அந்​தஸ்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் அரசு வழக்​கறிஞர்​களாக பி.சர​வணன், எம்​.பி.செந்​தில், ஆர். பார்த்​திபன், ஐ.பினய்​காஷ், எஸ்​.சிவசுப்​ரமணி​யன், எஸ்​.சிவ​தில​கர், கே.பொற்​கொடி ஆகியோர் அரசு ப்ளீடர்​கள் என்ற அந்​தஸ்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அரசு வழக்​கறிஞர்​கள் நியமன விதி​களின்​படி நிரந்தர அரசு வழக்​கறிஞர்​கள் முறை​யாக நியமிக்​கப்​படும் வரை இவர்​கள் அரசு சார்​பில் ஆஜராகி வாதிடு​வர் என தமிழக அரசின் பொதுத்​துறை முதன்​மைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்​கர் உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net