← முகப்பு செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் அவ்வளவு தான் என நெதன்யாகுவை போனில் அழைத்து டிரம்ப்

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் அவ்வளவு தான் என நெதன்யாகுவை போனில் அழைத்து டிரம்ப்
நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப்

பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சமீபத்தில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலின் முக்கிய ராணுவ விமானத் தளங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை வீசியது. எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வடகிழக்கில் மீண்டும் போர்பதற்றம் தொற்றி கொண்டது. நிலைமையை சமாளிக்க அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஈரான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தவதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார். இது தொடர்பான உரையாடலை டிரம்ப் தெரிவிக்கும் போது, "நான் நேதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்தும்படி கூறினேன். ' நெதன்யாகுவின் பட்டப்பெயரான பீபி நீங்கள் இனிமேல் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இல்லையெனில், மிக விரைவில் நீங்கள் உலக நாடுகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்' என்று நான் அவரிடம் தீர்க்கமாகக் கூறிவிட்டேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ind vs AFG- KL Rahul Form Analysis By Ravichandran Ashwin Highlights Consistent
09 Jun 2026
செய்திகள்
Suryakumar Yadav Shines For Triumphs Knights In Mumbai T20 After losing place
09 Jun 2026
செய்திகள்
தவெக ஆட்சி “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என திமுக முன்னாள்
09 Jun 2026
செய்திகள்
முதல்வர் விஜய் வரும் 11-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
09 Jun 2026
செய்திகள்
சர்வதேச அளவில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும்தான் திராட்சை பழம் ஆண்டு முழுவதும்
09 Jun 2026
செய்திகள்
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு செய்து சேர்த்துக்கொள்ள வேண்டாம்' என,தமிழ
09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net