இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாய்க்கு நிகராக 330 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் (27) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், நேற்று (26) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது