← முகப்பு செய்திகள்

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில்
விக்ராந்த் – ஐஸ்வர்யா ராஜேஷின் அண்டர் – 18 படம் பூஜையுடன் தொடங்கியது

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினில் கலந்துகொண்டு பேசிய நடிகை ராதிகா, “அண்டர் – 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ், இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, நடிகர்கள் ஐஸ்வர்யா, விக்ராந்த், சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்கிறார். நடிகர் சரத்குமார் பேசுகையில், “அண்டர் – 18 எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றை வரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நடிகர் விக்ராந்தின் ஆர்வம், உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.” என்று தெரிவித்தார். நடிகர் நட்டி பேசுகையில், “ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை. விக்ராந்த், உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர்” என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், :”நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் – 18 திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்” என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
2
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
3
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
4
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
5
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
6
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி
7
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net