டெங்குவினால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு
இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வாண்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 32,071ஆக பதிவாகியுள்ளது.
இதன்படி, டெங்கு பரவும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், கல்முனை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிலும் செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.