← முகப்பு செய்திகள்

அரச நிதியை மோசடி செய்ததற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
அரச நிதியை மோசடி செய்ததற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில்
சட்ட நடவடிக்கை அச்சத்தால் பஷில் நாட்டை விட்டு வெளியேறினார் – ஆனந்த விஜேபால

அரச நிதியை மோசடி செய்ததற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் தான் பஷில் ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சர்வதேச மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (1) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருள் ஒழிப்புக்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இலங்கையில் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு பிடியாணை பிறப்பி;க்கப்பட்ட நிலையில் பலர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். வெகுவிரைவில் மேலும் பலர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.அதேபோல் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தவாறு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அரச நிதியை மோசடி செய்ததற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் தான் பஷில் ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இவருக்கு எதிராக மாத்தறை நீதிமன்றமும், கொழும்பு கோட்டை நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பஷில் ராஜபக்ஷ அரச நிதியை மோசடி செய்யவில்லையாயின் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது தரப்பு நியாயத்தை நிரூபிக்கலாம். இவர்கள் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்துக்கொண்டு எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இலங்கை செய்திகள்

பஷில் ராஜபக்ஷ இன்னும் எவ்வளவு நாட்கள் வெளிநாட்டில் பதுங்கியிருப்பார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.சர்வதேச மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் வெகுவிரைவாக எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
விஜய் தொடங்கிய ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்
4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net