← முகப்பு செய்திகள்

அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஜுலை முதலாம் திகதி மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஜுலை முதலாம் திகதி மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற
அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஜுலை முதலாம் திகதி மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றும் நந்திக சனத் குமாநாயக்கவின் பதவியே மாற்றப்படவுள்ளது.

அவர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.அவர் பதவி விலகி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.

அவரின் பதவிக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்படுவார்.இவர் தற்போது ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாக கடமையாற்றுகிறார்.பெப்ரவரி 16 ஆம் திகதியே அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.

டித்வா பேரனர்த்தத்தின் போது இவரின் பெயரே அதிகம் பேசப்பட்டது. அண்மையில் பிரபாத் சந்திரகீர்த்த சென்றிருந்த விருந்துபசார நிகழ்விலும் இது தொடர்பில் அவர் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் அறியவந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கை தூதுவர் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்க தூதுவர் பதவி மிக முக்கியமானது என்பதாலே நந்திக சனத் குமாநாயக்க தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
முதல்வர் விஜய் வரும் 11-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக அமைச்சர் ச
2
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக
தமிழ் · 09 Jun 2026
3
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
4
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
5
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
6
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
7
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net